Mnadu News

புதுவை முன்னாள் முதல்வர் ஜானகிராமன் இறுதி அஞ்சலி …ஸ்டாலின் உள்ளிட்ட பெருந்தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி

புதுவை முன்னாள் முதல் அமைச்சர் ஜானகிராமன் அவர்களது இறுதி அஞ்சலி நிகழ்ச்சி அவரது சொந்த ஊரான ஆலத்தூர் கிராமத்தில் நடைபெற்றது .இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸ்டாலின் மற்றும் புதுவை முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.புதுவை முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமன் அவர்கள் நேற்று காலை உடல்நலக்குறைவால் புதுவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவரது இறுதி அஞ்சலி நிகழ்ச்சி புதுவையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.

இதனையடுத்து ,அவரது உடல் அவரது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கு அவருக்கு இறுதி அஞ்சலி செய்யப்பட்டது. இந்த இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார். இதேபோன்று புதுவை முதலமைச்சர் நாராயணசாமி அவர்கள் கலந்துகொண்டு ஜானகிராமனுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் பொன்முடி ஏவா வேலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் புதுவை மாநிலத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர் .இறுதியாக அவருக்கு புதுவை அரசு ஏற்பாடு செய்திருந்த 21 குண்டுகள் முழங்க அவருக்கு அரசு மரியாதையுடன் அவரது உடல் அவரது சொந்த இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் திமுக காங்கிரஸ் மற்றும் கிராம மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More