காந்தியை கொன்ற கோட்சே தேசபக்தர் என பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யாசிங் கருத்து தெரிவித்தார். இந்நிலையில் தேசப்பிதா காந்தியை இழிவுபடுத்தியதாகக் கூறி தேசத்தின் நலன் விரும்பிகள் எதிர்ப்பை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பிரதமர் நரேந்திரமோடி காந்தியை அவமதிக்கும் வகையில் பேசிய சாத்வி பிரக்யாசிங் மன்னிக்க முடியாதவர் எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ்-ம் , பா.ஜ.கவும் கடவுளை விரும்பவில்லை; கோட்சேவை தான் விரும்புகிறார்கள் என ’கோட்சே ஒரு தேசபக்தர்’என சாத்வி பிரக்யாசிங் கூறியது பற்றி ராகுல் காந்தி கிண்டலாக ட்வீட் செய்துள்ளார்.