உலகக் கோப்பை தொடரில் குல்பதின் நெய்ப் தலைமையில் ஆப்கான் அணி விளையாடியது. சில போட்டிகளில் அந்த அணி கடுமையாக போராடியது. இந்தியாவுக்கு கூட கடும் நெருக்கடி கொடுத்தது. போராடியே இந்திய அணி ஆப்கானிடம் வெற்றி பெற்றது. இருப்பினும், இந்த உலகக் கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட ஆப்கான் வெற்றி பெறவில்லை.இந்நிலையில், ஒருநாள், டெஸ்ட், டி20 ஆகிய மூன்று வகையான போட்டிகளுக்கும் ரஷித் கானை கேப்டனாக நியமித்துள்ளது ஆப்கான் கிரிக்கெட் வாரியம். முன்னாள் கேப்டன் அஸ்கர் ஆப்கான் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரஷித் தலைமையிலான அணி முதல்கட்டமாக வருகின்ற செப்டம்பரில் பங்களாதேஷ் அணியுடன் டெஸ்ட் போட்டியில் மோதுகிறது. அதனையடுத்து, நவம்பர் 5 தொடங்கி டிசம்பர் ஒன்றாம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 3 டி20, 3 ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More