நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தற்போது உரையாற்றிவருகிறார் . மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டதையடுத்து அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன.
இதனையடுத்து உரையாற்றிய அவர் முதல் 5 ஆண்டு கால பாஜக ஆட்சியை மக்கள் அங்கீகரித்துள்ளனர் என்றும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் வலிமையான தீர்ப்பை அளித்துள்ளனர் என்று கூறினார் .
மேலும் பேசிய அவர் புதிய இந்தியாவில் அனைவரும் முன்னேற்றமடைய சமமான வாய்ப்பு வழங்கப்படும் என்றும் ஒவ்வரு குடிமகனின் வாழ்கை மேம்படவும் உயரவும் இந்த அரசு செயல்படும் என்றார் .பாதுகாப்பான இந்தியாவை உருவாக்குவதே நமது நோக்கம் என்றார்