Mnadu News

சேலத்தில் ஏடிஎம் உடைக்க முயன்று கொள்ளை முயற்சி

சேலம் மாவட்டம் கிச்சிபாளையம் பகுதியில் இருக்கும் திருமலை நகரில் உள்ள கரூர் வைசியா வங்கியின் ஏடிஎம் மையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் எந்திரத்தை உடைத்து கொள்ளை அடிக்க முயன்றுள்ளனர்.

மும்பையில் உள்ள அந்த வங்கி அலுவலகத்திற்கு உடனே எச்சரிக்கை தகவல் கிடைத்ததையடுத்து, கிச்சிப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது- போலீசார் அங்கு செல்வதற்குள் கொள்ளையில் ஈடுபட முயன்றவர்கள் ஏடிஎம் எந்திரத்தை உடைக்க முடியாமல் அங்கிருந்து சென்றுவிட்டது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது.

இதனையடுத்து 5 லட்சம் ரூபாய் ரொக்கபணம் தப்பிய நிலையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.மேலும் 5 மாதங்களுக்கு முன்பு இதே ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

துரோகத்தை பற்றி செந்தில் பாலாஜி பேசக்கூடாது: எடப்பாடி பழனிசாமி தாக்கு.

சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மின்சாரத்துறை அமைச்சர்...

Read More