Mnadu News

அமெரிக்காவில் கண்காணிக்கும் பணியில் காவலருக்கு பதில் ரோபோக்கள்

அமெரிக்காவில் பொது இடங்களில் குற்றச்செயல்கள் நடப்பதை கண்காணிக்கவும், தடுக்கவும் தற்போது அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஹண்டிங்டன் பூங்காவில், பொதுமக்கள் குற்றச்செயலில் ஈடுபடுவதை கண்காணிக்கவும், தகவல் சேகரித்து போலீஸ் தலைமையகத்துக்கு அனுப்பி உடனடி நடவடிக்கை எடுக்கவும், ‘HP Robocop’ என்ற ரோபோ ஒன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த ரோபோ மனித உயரத்திலானது ‘‘கொஞ்சம் வழிவிடுங்கள்’’ மற்றும் ‘‘இன்றைய தினம் நல்ல நாளாக அமையட்டும்’’ போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி பூங்காவுக்கு வருவோரை வெகுவாக கவர்ந்து வருகிறது.

பூங்காவில் உள்ள ரோபோ போன்று, கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள முக்கிய தெருக்களிலும் போலீஸ் ரோபாக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தபட்டு வருகின்றன .

Share this post with your friends