Mnadu News

சரவண பவன் உரிமையாளர் மருத்துவமனையில் அனுமதி

சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலை புழல் சிறையில் அடைக்க சென்னை 4 வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து ராஜகோபாலை சென்னை அரசு ஸ்டான்லி மருத்துமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் போலீசார் அழைத்து வந்தனர். அவருக்குபல்வேறு மருத்துவ பிரச்சனைகள் உள்ளதாக கூறி ராஜகோபால் மற்றும் அவரது நண்பர் ஜனார்த்தனன் அகிய இருவரையும் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ராஜகோபால் அவர்களுக்கு சர்கரை அளவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் உள்ளதால். , மருத்துவ கண்காணிப்பில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியதன் அடிப்படையில் ராஜகோபாலை அனுமதித்துள்ளனர். அவரது நண்பர் ஜனார்தனன் இருவரும் அனுமதி தெரிவித்தனர்.

Share this post with your friends