ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரையில் செயல்படும் தனியார்பொறியியல் கல்லூரி வளாகத்தில் கோபி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் கோபி மற்றும் பவானி வட்டத்தில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளிகளின் 250க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
இதில் பங்கேற்கும் வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி,அவசர கால வழி மற்றும் வாகனந்தின் உறுதி தன்மை ஆகியவைகள் பரிசோதிக்கப்பட்டது. மேலும் இந்த ஆய்வில் கோபி தீயணைப்புத்துறையின் சார்பில் பள்ளி வாகனத்தில் விபத்து ஏற்பட்டால் தடுப்பது குறித்து வாகன ஓட்டுநா்களுக்கு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.