கன்னியாகுமரியில் கடந்த 5 நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், மார்த்தாண்டம் கடல் பகுதி சீற்றத்துடன் காணப்படுகிறது.
இதனால் அங்குள்ள கிராமங்களில் வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்துள்ளது மேலும், கடற்கரையோரம் அமைக்கப்பட்டிருந்த நீராடி-வள்ளவிளை சாலையும் சேதமடைந்ததோடு.
இந்நிலையில் வீடுகள் மற்றும் சாலையை சீரமைக்கும் பணி நடந்து வரும் நிலையில், உடனடியாக தூண்டில் வளைவு அமைத்து அந்த பகுதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.