வேலூர் மாவட்டம் ஆம்பூர் மல்லிகை தோப்பு பகுதியில் வசித்து வருபவர் முனுசாமி மற்றும் பத்மா இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இரண்டு ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தை உள்ளது. இதில் முதல் குழந்தை திவ்யதர்ஷினி இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார் ஆண் குழந்தை லோகேஷ் 1ஆம் வகுப்பு மூன்றாவது குழந்தை மௌலீஸ்வரர் என்ற மூன்று குழந்தைகள் உள்ளது. இதில் இவர்கள் இருவரும் ஆம்பூர் இந்து ஆரம்ப பள்ளியில் படித்து வருகின்றனர்.
தினந்தோறும் பள்ளி ஏற்பாடு செய்துள்ள ஷேர் ஆட்டோவில் பள்ளிக்கு செல்வது வழக்கம் . திவ்யதர்ஷினி 2 ஆம் வகுப்பும்,லோகேஸ்வரன் அதே பள்ளியில் 1ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். இன்று வழக்கம்போல் பள்ளிக்கு சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றிக்கொண்டு மல்லிகை தோப்பு தர்கா பகுதியில் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது ஆட்டோவில் இருந்து மாணவி திடீரென தவறி விழுந்தது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி உள்ளார்.
பின்னர் ,அங்கிருந்து திவ்யதர்ஷினி மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். திவ்யதர்ஷினி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அதைத் தொடர்ந்து ஆம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷேர் ஆட்டோவை பறிமுதல் செய்து ஓட்டுநர் கார்த்திகேயன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.