Mnadu News

ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்…

புல்வாமா மாவட்டம் பன்ஸம் என்ற கிராமத்தில் தீவிரவாதிகளிடம் நடமாட்டம் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதை அடுத்து பாதுகாப்புப் படை வீரர்கள், துணை ராணுவப் படையினர் மற்றும் சிறப்பு நடவடிக்கைக் குழுவினர் அந்த இடத்தைச் சுற்றி வளைத்தனர். அதிகாலை 2.10 மணி அளவில், வீரர்களை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தவே வீரர்களும் பதிலடி கொடுத்தனர்.சண்டையின் முடிவில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு இருப்பதாக ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர். கொல்லப்பட்டவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர்காள் தெரிவித்துள்ளனர். இதேபோல் அனந்த்நாக்கில் தீவிரவாதிகள் உடன் வீரர்கள் சண்டையிட்டு வருகின்றனர்.

Share this post with your friends