திருச்சியிலிருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தில் நடுவானில் புகை வந்ததால் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.சிங்கப்பூரின் ஸ்கூட் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் பயணிகள் மற்றும் ஊழியர்கள் என சுமார் 170 பேருடன் திருச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலையில் புறப்பட்டது. விமானம் புறப்பட்டு சிறிது நேரத்தில் விமானத்தின் சரக்கு அறையில் இருந்து புகை வெளியேறியதை விமானி கண்டறிந்ததாக தகவல் வெளிவந்தது .இதனையடுத்து அவசரம் அவசரமாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு விமானி உதவி கேட்டுள்ளார். மேலும் விமானம் அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று காலை சென்னை விமான நிலையத்தில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.