Mnadu News

திருப்பரங்குன்றம் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் மீது செருப்பு வீச்சு

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் அவர்களை நோக்கி காலனி வீசப்பட்டது. பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்பவர்களுடன் , கூட்டத்தில் இருந்த பாஜகவை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பத்து நபர்களை உடனடியாக குண்டுகட்டாக தூக்கிச் சென்றனர் .

மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மதுரைக்கு பிரச்சாரத்தில் வருவதையொட்டி இன்று காலை முதலே அவர் தங்கியிருக்கும் ஹோட்டல் மற்றும் அவர் செல்லும் பகுதிகளுக்கு காவல்துறையினர் பெருமளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் . இன்று மாலையிலேயே பாஜகவை சேர்ந்த 5க்கும் மேற்பட்டோர் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு காணப்பட்டது.

Share this post with your friends