Mnadu News

திருச்சி விமான நிலையத்தில் ரூ.23 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமான பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது, ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது அஸ்லம் என்பவர் தனது  பேண்ட் டிக்கெட் பாக்கெட் மற்றும் ஆசன வாயில் 678 கிராம் எடை கொண்ட தங்க கட்டிகளை பேஸ்ட் வடிவில் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் முகமது அஸ்லமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு ரூபாய் 23 லட்சம் என தெரியவருகிறது.

Share this post with your friends