Mnadu News

ராஜிவ்காந்தி நினைவு நாளையொட்டி சோனியா, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி அஞ்சலி

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில், இன்று அவரது நினைவுதினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. டெல்லி வீர்பூமியில் உள்ள ராஜிவ்காந்தியின் சமாதியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல், உத்தரப்பிதேச கிழக்கு பகுதி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Share this post with your friends