வறுமை காரணமாக படிக்கும் குழந்தைகளை வேலைக்கு செல்வது தவறு என்றும் நோக்கில் உலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது .இந்நிலையில் ,தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறை சார்பாக இன்று ஜூன் 12 குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர். நிலோபர் கபில் மற்றும் இசையமைப்பாளரும், நடிகருமான விஜய்அண்டனி, முன்னாள் பெப்சி தலைவரும், திரைப்பட தயாரிப்பாளருமான பெப்ஸி சிவா ஆகியோர் கலந்துகொண்டு ” மெட்ரோ தொடர்வண்டி விழிப்புணர்வு பயணத்தில் பள்ளிக் குழந்தைகளுடன் டி.எம்.எஸ்சிலிருந்து ,ஏர்போர்ட் வரை மெட்ரோ ரயிலில் பயணித்தார்கள் .
விழாவில் சிறப்பு விருந்தினராக விஜய் ஆண்டனி கூறியதாவது,எந்த குழந்தையும் சிறு வயதில் வேலைக்கு செல்ல கூடாது. நல்லா படிக்கணும் சந்தோஷமா வாழனும். குழந்தைகள் உருவாக்குவதுதான் வருங்கால இந்தியா அதனால் குழந்தைகளை படிக்க வைக்கவேண்டும். குழந்தை தொழிலாலர் இல்லாத நிலை வரவேண்டும் என்று கூறினார்.