Mnadu News

10 சதவீதம் இடஒதுக்கீடு குறித்து அரசின் நிலைப்பாடு குறித்து ஸ்டாலின் கேள்வி

சட்டசபையில் முக்கிய விவாதங்களில் ஒன்றான 69 சதவீத இடஒதுக்கீடு கொள்கையில் இருந்து அரசுபின்வாங்காது என்று சுகாதாரத்தூரை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் பதில் அளித்துள்ளார்.பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இடஒதிக்கீடு விவகாரம் குறித்து தன்னிச்சையாக செயல்படுத்த மாட்டோம் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார்.மேலும் இடஒதிக்கீடு பிரச்சனை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.அதன் பின்னர் சட்டசபையில் முதல்வர் பழனிச்சாமி கூறியதற்கு ஸ்டாலின் அவர்கள் கூறியதாவது, பொருளாதாரத்தில் முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு என்பதில் அரசின் நிலைப்பாடு என்ன என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.இந்த விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஒரு முடிவெடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Share this post with your friends