பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில் ,தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என ஸ்டாலின் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியது தான் என கூறினார்.மழைநீர் சேமிப்பு முறையை அனைவரும் செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தேர்தல் வராமல் இருக்கும் பொழுதே ஆட்சி மாற்றம் நிகழும் என ஸ்டாலின் கூறியதற்கு பதிலளித்த,தமிழிசை
மக்களவை தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல்கள் முடிந்த பிறகே ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை என்றும் இப்போது எப்படி ஏற்படும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.தேர்தல் வராமல் ஆட்சி மாற்றம் ஏற்படும் என ஸ்டாலின் கூறியது பற்றி தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .