Mnadu News

சிவகங்கை மாவட்ட மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்காததை கண்டித்து மாணவிகள் போராட்டம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மடிக்கணினி வழங்காததை கண்டித்து பள்ளிவாயில் முன்பு மாணவிகள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு கோஷமிட்டு வருகின்றனர்.சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள நாகப்பா மருதப்பா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டில் பள்ளியில் படித்த மாணவிகள் 300க்கும் மேற்பட்டோருக்கு மடிக்கணினி வழங்க வில்லை நீண்ட காலமாகியும் வழங்காததை கண்டித்து பல முறை முறையிட்டும் வழங்கபடவில்லை தற்பொழுது மடிக்கணினிகள் வழங்கும் விழாக்கள் நடந்து வருவதால் தங்களுக்கும் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சுமார் 100 மாணவிகள் பள்ளி வாயில் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். மடிக்கணினி வழங்கும் வரை போராட்டம் தொடரும் என மாணவிகள் கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

Share this post with your friends