உலகநாடுகள் முழுவதிலும் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துக்கொண்டு வருகிறது .இந்நிலையில் வடகிழக்கு நைஜீரியாவின் கொங்குடாவில் மூன்று இடங்களில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தற்கொலை தாக்குதலில் சுமார் 30 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளதாக தகவல் வெளியானது .மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.