‘விஸ்வாசம்’ படத்தினை தொடர்ந்து சிவா அடுத்ததாக சூர்யாவின் 39-வது படத்தை இயக்கப்போவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து, ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையைமக்க இருப்பதாகவும், ‘விஸ்வாசம்’ படத்தில் பணிபுரிந்த அதே குழுவினரை சூர்யா 39 படத்தில் ஒப்பந்தம் செய்ய சிவா முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, ‘விஸ்வாசம்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த வெற்றியும், படத்தொகுப்பை கவனித்த ரூபனும் சூர்யா படத்திலும் தொடர்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சூர்யா தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு வருகிற ஆகஸ்டில் சிவா இயக்கும் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More