இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் காமெடி படமாக உருவாகி இருக்கும் படத்தில் ஜோதிகாவுடன் ரேவதியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். யோகி பாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு 35 நாட்களில் முடிந்துள்ளது. இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார், கடைசி நாள் படப்பிடிப்பில் நடிகர் சூர்யாவும் கலந்துகொண்டு படக்குழுவை வாழ்த்தினார். இதனையடுத்து இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.