Mnadu News

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார் தமிழக முதல்வர்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறக்கூடிய அஷ்டதள பாத பத்ம ஆராதனை சேவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை குடும்பத்தினருடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு துணை செயல் அலுவலர் பாலாஜி வரவேற்று சுவாமி தரிசனம் செய்து வைத்து ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்தப் பிரசாதங்களைப் வழங்கி வேதபண்டிதர்கள் மூலமாக வேத ஆசிர்வாதம் செய்து வைத்தனர்.

பின்னர் கோவிலுக்கு எதிரே உள்ள அகிலாண்டம் அருகே தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டார். இதையடுத்து பேடி ஆஞ்சநேய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார் . சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு சென்னை புறப்பட்டு சென்றார்.

தமிழக சட்டப் பேரவையில் 117 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சியை தக்க வைக்க கூடிய நிலை ஏற்படும் என்று இருந்த நிலையில் நடைபெற்ற இடை தேர்தலில் அதிமுக 9 இடத்தில் வெற்றி பெற்றது. இதனால் சட்டப்பேரவையில் தற்போது அதிமுகவிற்கு 122 இடங்களுடம் பெரும்பான்மை பெற்றுள்ளது.

இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அரசுக்கு இருந்த பெரும்பான்மை குறைவிற்கான சிக்கல் இடைதேர்தல் முடிவால் தீர்வு அடைந்துள்ளது.

Share this post with your friends