Mnadu News

அமெரிக்காவின் சிறந்த திரைப்பட விருதை பெற்ற தமிழ் படம்

இயக்குனர் வஸந்த் இயக்கத்தில் திரைக்கு வர இருக்கும் திரைப்படம் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’. இந்த படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெறும் சர்வதேச திபுரான் திரைப்பட விழா மற்றும் நியூயார்க் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்த படத்திற்கு சிறந்த படத்திற்கான விருது கிடைத்துள்ளது. மேலும் அட்லாண்ட் மாகாணத்தின் திரைப்பட விழாவிலும் இந்த படத்திற்கு விருது கிடைத்துள்ளது. இந்த படத்தில் பார்வதி, லட்சுமி ப்ரியா சந்திரமௌலி, காளிஸ்வரி ஸ்ரீனிவாசன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Share this post with your friends