Mnadu News

7 பேர் விடுதலை தீர்மானம் குறித்து தமிழக முதல்வர்

தி.மு.க. உறுப்பினர் சுதர்சனத்தின் கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர், 7 பேர் விடுதலை தொடர்பான தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் முடிவெடுப்பார் என்றும் தெரிவித்தார். அப்போது தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்ற வாய்ப்பை நீதிமன்றம் கொடுத்துள்ளது என்றும், அந்த வாய்ப்பு தங்களுக்கு கிடைத்திருந்தால் உடனடியாக விடுதலை செய்திருப்போம் என்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கூறினார்.

அதற்கு பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்று சொன்னபிறகு, விடுதலை செய்ய உடனடியாக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.

இதைப்பற்றி மேலும் பேசிய முதலமைச்சர் நளினியை மட்டும் விடுதலை செய்ய திமுக ஆட்சியில் முடிவு செயப்பட்டதாகவும், சட்டம், தண்டனை என்பது எல்லோருக்கும் பொதுவானது என்றும் கூறினார்.

Share this post with your friends