நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஒரு ஆரோக்கியமான வெற்றி கிடைத்தாலும் தமிழகத்தை பொறுத்தவரை தோல்வியை தான் தழுவியது .இந்நிலையில் இதுகுறித்து தமிழிசை சௌந்தராஜன் கூறியதாவது , பாஜக தமிழகத்தில் தோல்வியடைந்ததற்கு வாக்களிக்காததால் தமிழகத்திற்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்காது என கூறுவதில் துளியும் உண்மையில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜகவுக்கு வாக்களிக்காததால் தமிழகத்திற்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்காது என சிலர் திட்டமிட்டு வீண் வதந்திகளை பரப்பி வருவதாக கூறினார். மேலும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இல்லாத அளவுக்கு, பாஜக ஆட்சியில் தமிழகத்திற்கு பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.