திருப்பூர் மாவட்டம் தாராபுரம், குளத்து புஞ்சை தெருவை சேர்ந்த சாந்தி என்ற பெண் , தாராபுரம் ஜவுளி கடை வீதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் சென்று துணிகள் வாங்கி கொண்டிருந்த , பின் நடந்து வீடு திரும்பினார். வீட்டிற்கு அருகே ஆர் கே ஆர், சாலை சந்திப்பு அருகே சென்றபோது பைக்கில் வந்த இரு வாலிபர்கள், திடீரென சாந்தியின் கழுத்தில் இருந்த 6, பவுன் தாலிச் சங்கிலியை, கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி கூச்சல் போட்டார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், இருசக்கர வாகனங்களில், பைக்கில் சென்ற மர்ம நபர்களை விரட்டினர், இருப்பினும் வழிப்பறி கொள்ளையர்கள் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். பட்டப்பகலில் பெண்ணிடம் தாலி சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தாராபுரம் பகுதியில் தொடர் திருட்டுகளும், வழிப்பறிகளும் நடப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.