ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்குதல் நடத்திய 74வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் போது, ஜப்பான் மீது அமெரிக்க அணுகுண்டு தாக்குதல் நடத்தியது. இதில் ‘யுரேனியம் 235’ என்ற அணுகுண்டு ஹிரோஷிமா நகரில் விழுந்ததில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கொத்தாக மடிந்தனர். அதன்பின்னரும் அணுகுண்டின் கதிர்வீச்சு உணரப்பட்டதால், அந்தாண்டு இறுதியில் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் மடிந்தனர்.
தற்போதும் அங்கு பிறக்கும் குழந்தைகளில் சிலர், கதிர்வீச்சின் தாக்கம் காரணமாக ஊனமுடன் பிறப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், உலகையே உலுக்கிய இந்த துயர சம்பவத்தின், 74வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.அமெரிக்கா குண்டு வீசிய அதே நேரமான காலை 8.15 மணிக்கு, ஹிரோஷிமா நகரில் உள்ள நினைவிடத்தில் மணியோசை ஒலிக்கப்பட்டது.