Mnadu News

ஆனி உத்திர திருவிழா நெல்லை செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது

சிவபெருமான் நடனமாடிய 5 சபைகளில் ஒன்றான தாமிரசபை அமைந்துள்ள நெல்லை, ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் ஆனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை நடைதிறக்கப்பட்டு சிறப்பு ஹோமம் நடைபெற்றது. அதனைதொடர்ந்து பல்லக்கில் ஊர்வலமாக திருக்கொடி எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பின் கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. இதையடுத்து, பால்,மஞ்சள் உள்ளிட்டவற்றை கொண்டு சிறப்பு அபிசேகமும் சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது.

Share this post with your friends