பிரேசில் நாட்டின் அமேசான் மழைக்காடுகளில் மாரன்ஹாவோ என்ற இடத்தில் ஆவா இனத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். பலநூறு ஆண்டுகளாக வெளியுலகின் தொடர்பில் இல்லாமல் தனித்து வாழ்ந்து வரும் இவர்கள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஹெலிகாப்டரில் சென்ற ஆய்வாளர்களை வில் அம்புகளால் தாக்கும் வீடியோவை ஒரு ஜியோகிராபிக் சேனல் வெளியிட்டது.
இந்நிலையில் தற்போது ஆவா பழங்குடியினத்தவர் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் அமைப்பு ஒன்று ஆவா இனத்தைச் சேர்ந்த ஒருவரின் அரிதான வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் அவர்கள் இருப்பதால் விரைவிலேயே அந்த இனம் அழிந்து போகும் அபாயம் இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.