தமிழகத்தில் இருந்து உத்திரப் பிரதேச மாநிலம், காசிக்கு ரயிலில் ஆன்மிக சுற்றுலா சென்ற 5 பேர் கடும் வெயிலின் காரணமாக உயிரளியாந்தனர் .
உயிரிழந்த 5 பேரும் வயதுமுதிந்தவர்கள் வெப்பத்தை தாங்கமுடியாமல் உயிரிழந்ததாக கூறப்படுகிறது . இந்நிலையில் தற்போது உயிரிழந்த 5 பேரின் உடல்கள் கோவை வந்தடைந்துள்ளது.
பச்சையா, தெய்வாணை ஆகியோர் உடல்கள் ரயில் மூலம் வந்த நிலையில், மீதமுள்ள 3 பேரின் உடல்களும் விமானம் மூலம் கோவை கொண்டு வரப்பட்டு அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது .