Mnadu News

திருப்பத்தூரில் எல்லைப் பாதுகாப்பு படை வீரரின் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம்

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் உள்ள கிருஷ்ணன் இவரது மகன் ராஜேஷ் என்கின்ற நபர் அசாம் மாநிலத்தில் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி இரவு பணியில் இருந்தபோது இறந்தார்.பின்னர் அவரது உடல் கவுகாத்தியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டது.பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான திருப்பத்தூர் பாரதி நகருக்கு ராணுவ வீரரின் உடல் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 11.30 மணியளவில் பாரதி நகர் சுடுகாட்டில் ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படும் .

Share this post with your friends