இந்தியை யாரும் திணிக்கவில்லை என்றும் மத்திய அரசுக்கு இந்தியை திணிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திப்பில் அவர் கூறுகையில் , தமிழ் முதுமையான பழமொழிகள் என்றும் எல்லோராலும் அறியப்பட்ட மொழி என்றும் குறிப்பிட்டார்.தமிழகத்தில் நடைபெற்று வரும் கொலை சம்பவங்கள் மிகுந்த வருத்தத்தை தருகிறது என்றும் கல்லூரி மாணவர்கள் கத்தியுடன் செல்கிறார்கள் என்றும் இதனை சரி செய்ய காவல்துறை இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழிசை கேட்டுக் கொண்டார்.