Mnadu News

ராகுல்காந்தி பதவி விலக கூடாது என வலியுறுத்தி காங்கிரஸ் நிர்வாகி தீக்குளிக்க முயற்சி

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததையொட்டி அந்த கட்சியின் தலைவர் ராகுல்காந்தி பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்தார் .மேலும் ,இந்த ராஜினாமா குறித்து ராகுல் காந்தி அந்த மனுவை இன்னும் வாப்பஸ் செய்யாமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .மேலும் இந்த ராஜினாமாவை ரத்து செய்யக்கோரி பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.இந்நிலையில் , சேலம் பச்சப்பட்டி பகுதியை சேர்ந்த பழனி என்பவர் சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பதவி வகித்து வருபவர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலம் வந்த அவர் திடீரென உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். அப்போது ராகுல் காந்திக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பியபடி தீக்குளிக்க முயன்ற அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

Share this post with your friends