Mnadu News

தொட்டில் சேலை கழுத்தில் இறுகி சிறுமி உயிரிழப்பு…

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த வடிவேலுவின் 11 வயது மகள் அஸ்வதி, கோடைவிடுமுறைக்காக பெரம்பூரில் உள்ள அத்தை ஜானகி வீட்டிற்கு வந்துள்ளார். அத்தை, மாமா, சித்தப்பா அனைவரும் வேலைக்கு சென்ற நேரத்தில், வீட்டிற்குள் சேலையில் தொட்டில் கட்டி சிறுமி விளையாடிக் கொண்டிருந்துள்ளார். எதிர்பாராதவிதமாக, சேலை துணி கழுத்தில் இறுகி, சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். வேலை முடித்து வீடு திரும்பிய சிறுமியின் சித்தப்பா ஈஸ்வரன், கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், ஜன்னல் வழியாக எட்டி பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சிறுமி தொட்டில் கட்டிய சேலையில் கழுத்து இறுகி அசைவற்ற நிலையில் இருந்துள்ளாள். உடனடியாக, சிறுமியை மீட்டு பெரம்பூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்த போது, அவள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஊஞ்சல் விளையாட்டு விபரீதத்தில் முடிந்த சம்பவம், சிறுமியின் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Share this post with your friends