Mnadu News

காணாமல் போன AN -32 என்ற விமானம் கண்டுபிடிப்பு

இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் கடன் 3 ஆம் தேதி 13 வீரர்களுடன் மாயமானதாக தகவல் வெளிவந்தது .இது குறித்து இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது , AN -32 என்ற விமானம் மாயமாகியுள்ளதாக விமானப்படை சார்பில் தகவல் அளித்துள்ளது .இந்த விமானத்தில் கிட்டத்தட்ட 13 பேருடன் சென்ற விமானப்படை விமானம் மாயமாகியுள்ளது .

இந்த விமானமானது மதியம் 12 .25 மணிக்கு ஜூன் 3 ஆம் தேதி புறப்பட்ட விமானம் பின்னர் சுமார் ஒரு மணி அளவில் தகவல் தொடர்பை இழந்துள்ளதாகவும் மேலும் , தற்போது வரை எந்த ஒரு தகவல் இல்லை என விமானப்படை சார்பில் தகவல் வெளியாகி வந்தது .

இந்நிலையில் தற்போது அருணாச்சல பிரதேசம் மாநிலத்தின்
சியான் மாவட்டம் கட்டி என்ற கிராமத்தின் அருகே அந்த அந்த விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . மேலும் இது காணாமல் போன அந்த AN -32 ரகம் விமானம் தானா என்ற தகவல் வெளியாகவில்லை .

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More