திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தால் வரும் உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தலில் பெரும் வெற்றி பெரும் என காரைக்குடியில் ப.சிதம்பரம் கருத்து கூறினார் .சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெறற காங்கிரஸ் கட்சியின் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசியபோது இவ்வாறு கூறினார்.
மேலும்,இந்த வெற்றி கூட்டணியை அமைத்த ஸ்டாலினுக்கும், கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டப.சிதம்பரம,அவர்கள் பின்னர் அவர் கூறியதாவது தோல்வியைக் கண்டு நாங்கள் துவண்டுவிடவில்லை என்றும்,காங்கிரஸ் கட்சி போர்களத்தில் தான் தோற்றுள்ளது போரில் தோற்கவில்லை என்றும் தெரிவித்தார்.
1971ம் ஆண்டு இந்திரா காந்தி, கலைஞர் அமைத்த கூட்டணி. இக் கூட்டணி என்றும், 6 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்று, வெற்றி கூட்டணியாக தொடர்கிறது என்ற ப.சிதம்பரம்நீட் தேர்வை நிறுத்த முடியவில்லை என்ற மிகப் பெரிய கவலை தங்களுக்கு உள்ளதாகவும் வேதனையுடன் தெரிவித்தார்.