தமிழகத்தில் நடைபெற உள்ள 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்வடைகிறது . இதனையொட்டி , தலைவர்கள் இன்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், ஆட்சிக்கு வருவதற்கு தாம் அலையவில்லை எனவும், எடப்பாடி பழனிசாமியை மக்களே விரும்பவில்லை என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார்.
தமிழகம், புதுச்சேரியில் வேலூர் தொகுதியைத் தவிர 39 நாடாளுமன்ற தொகுதிக்கான பொதுத்தேர்தலும், 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலும் கடந்த மாதம் 18-ம் தேதி நடைபெற்றது.இதையடுத்து, தமிழகத்தில் மேலும் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதேபோல, 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த நிலையில், 4 தொகுதிகளிலும் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது.