Mnadu News

பிரபல நடிகர் கிரிஷ் கர்னாட் காலமானார்

ஷங்கர் இயக்கத்தில் தமிழில் உருவான காதலன் எனும் படத்தில் நடித்த பிரபல கர்நாடக நடிகர் கிரிஷ் கர்னாட் இன்று காலமானார்.

இந்திய சினிமாவில் ஒரு நடிகராகவும் , இயக்குனராகவும் மற்றும் திரைக்கதை எழுத்தாளராகவும் திரைப்பட உலகில் இன்று வரை அவர் நிலைத்து நிற்கிறார். இதன் மூலம் கிரிஷ் கர்னாட் ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார்.

சமீபத்தில் கன்னடத்திற்கான ஞானபீட விருது பெற்ற ஏழு நபர்களில் இவரும் ஒருவராவார்.தமிழில் காதலன், ரட்சகன், செல்லமே, ஹேராம் போன்ற படங்களில் நடித்தவர் கிரிஷ் கர்னாட் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது இந்த இறப்பிற்கு பல திரைத்துறை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More