ஆந்திர மாநிலத்தின் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று முதல் அமைச்சரவை கூட்டத்தை அறிவித்துள்ளார் . ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் உள்ள ஆந்திர தலைமை செயலகத்தில் இன்று மாலை இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.
25 அமைச்சர்களும் 5 துணை முதல்வர்களும் இந்த கூட்டத்தில் கட்டாயம் கலந்துகொள்ள முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார் .மேலும் இந்த கூட்டத்தில் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், நிதிச்சுமை குறித்தும் அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை செய்கிறார்.