பிரதமர் மோடி தலைமையில் இன்று காலையில் தலைநகர் டெல்லியில் கேபினட் அமைச்சர்களின் இரண்டாவது கூட்டம் நடைபெற்று இதனை தொடர்ந்து இருக்கும் ஒட்டு மொத்த அமைச்சர்களும் பங்கேற்கும் முதல் அமைச்சரவையின் கூட்டம் நடைபெற உள்ளது.
நடைபெறும் இந்த கூட்டத்தில் கேபினட் அமைச்சர்கள் அவர்களது இணையமைச்சர்களுக்கு உரிய இலாகாகளை பிரித்து வழங்குவது குறித்து விவாதிக்கப்படும் எனத் கூறப்படுகிறது . மேலும் மத்திய அரசின் திட்டங்களை உடனடியாக அமல்படுத்த அமைச்சர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து, பிரதமர் எடுத்துரைப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது .