Mnadu News

விக்ரமின் 58வது படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

பிரபல நடிகர் விக்ரம் தற்போது முன்னணி இயக்குனர்கள் இயக்கும் ‘துருவ நட்சத்திரம்’, ‘கடாரம் கொண்டான்’, ‘மகாவீர் கர்ணா’ ஆகிய  படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தனது 58வது படத்தில் நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் மற்றும் வைகம் ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது .

Share this post with your friends