Mnadu News

அசாம் வெள்ளத்தை முதலாவது சாட்டிலைட் படமாக தந்தது -சீனா

அசாமில் வெள்ளம் ஏற்பட்ட போது சீனா தான் முதலில் செயற்கைக்கோள் புகைப்படங்களைத் தந்து உதவியதாக இந்தியா தெரிவித்துள்ளது.பல்வேறு நாடுகளும் செயற்கைக்கோள்களை ஏவினாலும், இயற்கைச் சீற்றத்தின் போது எந்த இடத்தில் அதிக பாதிப்பு, எங்கு அதிக உதவி தேவைப்படுகிறது என்பதை அறிய அந்தந்த குறிப்பிட்ட இடத்துக்கு மேல் இருக்கும் செயற்கைக் கோளே புகைப்படம் எடுக்க முடியும்.

இதனை பல்வேறு நாடுகளும் நட்பு மற்றும் நல்லெண்ண அடிப்படையில் பகிர்ந்து கொள்கின்றன. அசாமில் கடந்த 17-ம் தேதி வெள்ளம் ஏற்பட்ட போது இஸ்ரோவின் கோரிக்கையை ஏற்று சீனாதான் முதன் முதலில் தனது கேவோஃபென் 2 செயற்கைக் கோள் பதிவு செய்த அசாமின் வெள்ள பாதிப்பு புகைப்படங்களை இந்தியாவுக்கு அனுப்பியது.இந்தியாவின், கார்டோ சாட் 1 செயற்கைக் கோள் 18-ம் தேதியே அவ்வழியே கடந்ததால் அது மறுநாளே புகைப்படம் அனுப்பியது. சீனா மட்டுமின்றி கொரியா, கனடா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளும் செயற்கைக்கோள் புகைப்படங்களை அனுப்பியுள்ளன.

Share this post with your friends

தமிழகத்தில் வாக்குச்சாவடிகளுக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு இயந்திரங்கள்...

Read More

பதற்றமான 8,050 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு – சத்யபிரதா சாகு

பதற்றமான 8,050 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது....

Read More