சென்னை மக்கள் பலர் பயணிக்கும் ஒன்றாக இருப்பது புறநகர் ரயில் போக்குவரத்து கழகம்.அதிலும் காலை நேரங்களில் கல்லூரி மாணவ ,மாணவிகள் ,வேளைக்கு செல்லுபவர் ,போன்றோர் பலர் பயணிப்பதால் எப்பொழுதும் கூட நெரிசலாகவே இருக்கும்.இந்நிலையில் ,சென்னை கொருக்குப்பேட்டையில் சரக்கு ரயில் தடம் புரண்டதால், பயணிகள் ரயில் சேவை மூன்று மணி நேரம் பாதிக்கப்பட்டது. சென்னை தண்டையார் பேட்டையில் இருந்து மதுரை சென்ற சரக்கு ரயில் கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் அருகே தடம் புரண்டது. அதனால் சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கத்திலான அனைத்து புறநகர் ரயில்களும் நிறுத்தப்பட்டன. சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர், தண்டவாளங்கள் சரி செய்யப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டன.
நரேந்திர மோடிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி இன்று தனது 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி...
Read More