திருப்பூர் வஞ்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவரான ராஜாத்தி திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயானவர். தண்ணீர் தட்டுப்பாடு நிலவிய நிலையில் மழை நீரை சேகரிக்க முடிவு செய்த இவர் இதற்காக தனது வீட்டின் மாடியை சுண்ணாம்பு அடித்து மழை நீர் தேங்கும்படி தாழ்வாக அமைத்தார்.
மழை பெய்யும் போது மாடியிலிருந்து வழியும் நீரை தோனி வைத்து கட்டி அதை பைப் மூலம் கீழிறக்கி இரண்டு நீர்த்தேக்க தொட்டிகளில் சேகரிக்கிறார். இவ்வாறு சேகரிக்கும் நீரை குடிப்பதற்கும் இதர தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகிறார். ராஜாத்தியின் இந்த செயலை அப்பகுதி மக்கள் பாராட்டுகின்றனர்.