மணப்பாறை அருகே கணவாய்ப்பட்டியில் விவசாயி பெருமாள் என்பவர் பாலமலை என்ற இடத்தில் உள்ள தனக்கு சொந்தமான தோட்டத்தில் 60 செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று இரவு பாலமலை வனப்பகுதியில் இருந்து வந்த மர்ம விலங்குகள் பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த செம்மறி ஆடுகளை கடித்து குதறியதில் 7 ஆடுகள் உயிரிழந்தன. படுகாயமடைந்த 8 ஆடுகளுக்கு கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்து வருகிறார்.
தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக இப்பகுதியில் மர்ம விலங்குகள் நடத்திய வேட்டையில் 30க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்துள்ளதால் பொதுமக்களிடையே பாபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More