விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் திருநாவலூர் (கிழக்கு) எம்.வி ஏழுமலை ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் தாண்டவராயன், மாவட்ட பொருளாளர் ரகுராமன், கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். மனு கொடுக்கும் போராட்டத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை வறட்சிப் பாதிப்பு மாவட்டமாக அறிவித்து விட்டு, வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரண தொகையை உடனே வழங்கி விடு, பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அனைத்து விவசாயிகளுக்கும் இன்சூரன்ஸ் தொகையை உடனடியாக வழங்கி விடு, என பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.அப்போது உளுந்தூர்பேட்டை திருநாவலூர் திருவெண்ணைநல்லூர் விவசாய சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More