Mnadu News

ஆம்புலன்ஸ் இல்லாத காரணத்தால் பைக்கில் அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணி

லட்ஹர் மாவட்டத்தில் 4 மாத கர்ப்பிணிப் பெண், திடீரென சுயநினைவிழந்துவிட்டதால், அவரை அவசரமாக சந்த்வா சமூக நல மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என உறவினர்கள் ஆம்புலன்சுக்கு அழைத்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை என்பதால் இருசக்கரவாகனத்திலேயே வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர் .

ஆம்புலன்சை அழைத்தால் அது வரும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் ஆனால் அவர்கள் காத்திருக்காமல் இருசக்கர வாகனத்தில் எடுத்து வந்துவிட்டதாகவும் மூத்த மருத்துவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பெண் மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார் .

Share this post with your friends