Mnadu News

புதிய உச்சத்தை தொட்டது தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை சிறிது காலமாக உச்சத்தை தொட்டு வருகிறது.இந்நிலையில் தங்கத்தின் விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது, ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு கிராமுக்கு 43 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 308 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதன்படி ஒரு சவரன் தங்கம் 26 ஆயிரத்து 464 ரூபாயாக உள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் 41 ரூபாய் 40 காசுகளாக உள்ளது. தொடர்ந்து, தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

Share this post with your friends