Mnadu News

ஜோலார்பேட்டை அருகே மூன்று மாதமாக குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் கிராமத்தில் சுமார் 400 குடும்பங்களும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இந்த கிராமத்தில் சுமார் மூன்று மாத காலமாக குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை என அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இன்று ஊர் பொதுமக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் வழியாக வெலக்கல்நத்தம் செல்லும் சாலையில் பெண்கள் மற்றும் ஆண்கள் என அனைவரும் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அறிந்து ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஊர் பொது மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் இறுதி வரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவரும் வராததால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.ஓரிரு நாட்களில் எங்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப் போவதாக பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

Share this post with your friends